சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நடந்த விபரீதம்.. கோர விபத்தில் சிக்கிய கேரள குடும்பம்.. 2 பெண்கள் பலியான சோகம்!
![நத்தம் விபத்து](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/f1cb256ed6d7aa1c4e06374cfc5c1e8e.jpg)
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மிதுன்ராஜ் (42). திருச்சியில் உள்ள பவர் கிரீட் என்ற அரசு நிறுவனமான மின்சார வாரியத்துக்கு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கேரளாவில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த குன்னிகண்ணன் (64), இவானி (3), இசானி (3), ஷிமானி (6), செபின் (38), அஸ்வத் (28), அருந்ததி (18), அஞ்சலி (31), அஜிதா (40), மிதுன்ராஜ் (42), ஷோபனா (51), சோபா (45) ஆகியோர் சுற்றுலா செல்ல திட்டமிட்டு திருச்சியில் இருந்து மதுரை வந்தனர்.
காரை மிதுன்ராஜ் ஓட்டி வந்தார். அனைவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மைல்கல்லில் மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் 100 மீட்டர் தொலைவில் உள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. .
இந்த விபத்தில் காருக்குள் இருந்த சோபா (45), ஷோபனா (61) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்து நத்தம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறந்த ஷோபனாவின் உடல் சேதமடைந்த காருக்குள் சிக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி காரில் இருந்த ஷோபனாவின் உடலை மீட்டனர். நத்தம் போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரின் வேகத்தில் காரின் முன்பக்க டயர் சுமார் 200 மீட்டர் தூரம் பறந்து வனப்பகுதிக்குள் விழுந்தது. மேலும், நத்தம்-துறங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!