என்னது 86 லட்சமா?.. மின் கட்டணத்தை பார்த்து ஷாக் ஆன தையல் கடைக்காரர்!
குஜராத்தின் லால் சாத் பகுதியில் பெண்கள் ஆடைகளுக்கான தையல் கடையை முஸ்லிம் அன்சாரி நடத்தி வருகிறார். மாமாவுடன் சேர்ந்து வியாபாரம் செய்கிறார். இந்நிலையில் கடைக்கு எப்பொழுதும் ரூ.2000க்குள் மின்கட்டணம் வருகிறார்.இந்த மின்கட்டணத்தை யுபிஐ மூலம் செலுத்தி வந்தார். ஆனால் இந்த மாதம் மின் கட்டணம் ரூ.86 லட்சமாக வந்துள்ளது. இதை பார்த்த கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மின்சார வாரியத்திற்கு சென்று புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த மின் வாரிய அதிகாரி கடைக்கு சென்று மீட்டரை சரிபார்த்தார்.அப்போது மின் வாரிய ஊழியர், மின்சார ரீடிங்கை தவறாக எழுதிக் கொடுத்தார். அதாவது, மின் மீட்டரை எடுத்த மின் வாரிய ஊழியர், இரண்டு பூஜ்ஜியங்களை சேர்த்து தவறாக எழுதியதால் தான், இவ்வளவு மின் கட்டணம் வந்துள்ளது தெரியவந்தது.
பின்னர், மீட்டரில் இருந்த மின் ரீடிங்கை அதிகாரிகள் சரியாக மாற்றி எழுதி வைத்தனர். தற்போது அந்த கடையில் மின் கட்டணம் ரூ.1540 மட்டுமே.இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்திற்கு பிறகு அன்சாரியின் தையல் கடை மிகவும் பிரபலமாகி வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!