எப்போ கல்யாணம்.. தொடர்ந்து டார்ச்சர் செய்த காதலி.. திட்டம் தீட்டி காதலன் செய்த கொடூரம்!

 
விக்னேஷ்

ஹைதராபாத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுடன் டேட்டிங் தொடங்கினார். அவர்களின் உறவு Instagram மூலம் வளர்ந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு, விக்னேஷ் தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் அந்த பெண் வேறு யாரிடமாவது பேசுவதாக சந்தேகமடைந்த விக்னேஷ் அவரை கண்டித்துள்ளார். இது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியதால், தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

இன்ஸ்டா

பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் கூறினார். இருப்பினும், அந்த பெண் அவரை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் விரக்தியடைந்த விக்னேஷ், தான் காதலித்த பெண்ணை கொல்ல முடிவு செய்தார்.இதுகுறித்து விக்னேஷ் தனது நண்பர் ஷாஹித் மற்றும் ஷாஹித்தின் மனைவி கல்யாணிடம் கூறியுள்ளார். ஆனால் இருவரும் விக்னேஷுக்கு உதவ மறுத்துவிட்டனர். ஆனால், மனம் தளராத விக்னேஷ், திருமண ஏற்பாடுகளை செய்து, திருமண நாளிலேயே கொலை செய்ய முடிவு செய்தார்.

கொலை

திட்டமிட்டபடி திருமணத்தை முடித்துவிட்டு, அன்று மாலை அந்த பெண்ணின் தலையை சுவரில் மோதி கழுத்தை நெரித்து கொன்றான். உடலை பார்த்த விக்னேஷின் நண்பர்கள் இருவரும் கொலையை மறைக்க உதவினர். இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web