சபரிமலைக்கு சென்று வீடு திரும்பிய போது அதிர்ச்சி.. கோர விபத்தில் 28 பேர் படுகாயம்!

 
திருநெல்லி விபத்து

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள திருநெல்லி அருகே சபரிமலை கோயிலில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் காயமடைந்தனர். அந்த பேருந்தில் 2 குழந்தைகள் உட்பட கர்நாடகாவை சேர்ந்த 45 பேர் பயணம் செய்தனர். சபரிமலை கோயிலுக்குச் சென்றுவிட்டு மைசூரில் உள்ள ஹுன்சூருக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தது.

இன்று காலை 6 மணியளவில் விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக வயநாட்டில் உள்ள மானந்தவாடி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவரும், வயநாடு மக்களவை வேட்பாளருமான பிரியங்கா காந்தி கூறுகையில், “கர்நாடகாவிலிருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் வயநாட்டில் துரதிர்ஷ்டவசமாக பேருந்து விபத்துக்குள்ளானதைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் மண்டலம் - மகரவிளக்கு யாத்திரை சீசன் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கியது. முன்னதாக, காவல்துறை தலைமை ஒருங்கிணைப்பாளர், ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித், விழா ஏற்பாடுகள் குறித்து காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டினாலும், நிலைமையை சமாளிக்க போலீசார் முழுமையாக தயாராக உள்ளனர் என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web