வயலுக்கு தண்ணீர் விட சென்றபோது ஷாக்.. 40 அடி ஆழ கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த P.ஆயிபாளையம் அருகே நாட்டாமங்கலம் செல்லும் சாலையில் பழனிவேல் (50) என்பவரது தோட்டம் உள்ளது. இவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் சுமார் 15 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்நிலையில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விட பழனிசாமி கிணற்றின் அருகே சென்றவர் கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்.
அப்போது, தண்ணீரில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு பழனிவேல் பெரும் அதிர்ச்சியடைந்தார். இதுக்குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புதுச்சத்திரம் காவல் துறையினர் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சடலத்தை மீட்டனர்.
புதுச்சத்திரம் காவல் துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் சுமார் 40 வயது மதிக்கதக்கவர். இவர் குறித்து தகவல் தெரியாததால், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!