தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது விபரீதம்.. 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி!

 
பாத்திமா சஹானா

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சலாக்கா பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பாத்திமா சஹானா என்ற மாணவி மருத்துவக் கல்வி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி பாத்திமா சஹானா நேற்று இரவு 11 மணியளவில் விடுதியின் 7வது மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த பாத்திமா, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த பாத்திமாவை மீட்ட மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web