பள்ளி வேனில் மகனை ஏற்ற சென்ற போது விபரீதம்.. மின்சாரம் தாக்கி தாய் பலியான சோகம்!
பெங்களூரு அருகே உள்ள கல்புர்கியில் நேற்று காலை 9.30 மணியளவில் பாக்யஸ்ரீ என்ற பெண் மாற்றுத்திறனாளி மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக பள்ளி பேருந்துக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில், வழக்கம் போல் பள்ளி பேருந்து வந்தது, பாக்யஸ்ரீ தன் மகனை பள்ளி பேருந்தில் ஏற்றினார். அப்போது, அங்கு தொங்கிக் கொண்டிருந்த அறுந்து கிடந்த மின் ஒயர், அந்த பெண்ணையும், மாணவனையும் தீண்டியதால், இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
பாக்யஸ்ரீயின் உடலில் பாய்ந்த மின்சாரம் பாக்யஸ்ரீயின் உடலில் தீப்பொறியை ஏற்படுத்தியதால் அவர்களைக் காப்பாற்ற சுற்றியிருந்தவர்கள் தயங்கினர். ஆனால், சிலர் பஸ்சை அந்த இடத்தில் இருந்து நகர்த்தச் சொன்னதால்... பள்ளி பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திவிட்டார். இதனால் பாக்யஸ்ரீயின் உடலில் இருந்து மின் ஒயர் அறுந்து சென்றது.
உடனே அருகில் இருந்தவர்கள் பாக்யஸ்ரீ மற்றும் அவரது மகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பாக்யஸ்ரீ இறந்த நிலையில், அவரது மகன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவியில் பதிவான சம்பவத்தின் அடிப்படையில் பாக்யஸ்ரீயின் குடும்பத்தினர் மின்சாரத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!