விவசாய நிலத்திற்கு சென்ற போது விபரீதம்.. நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் படுகாயம்!

 
சிபிராஜ்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு பகுதியில் வசித்து வரும் வேலன் என்பவரின் மகன் சிபிராஜ். இந்நிலையில், இவரும், இவரது கூட்டாளி இருவரும் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட  வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

வெடி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் காயம் அடைந்த சிபிராஜை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் மற்ற இளைஞரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலத்தில்  நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் காயமடைந்த சம்பவம் குறித்து மேல் செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web