வாக்களிக்க சென்ற போது விபரீதம்.. சரிந்து விழுந்து உயிரை விட்ட சுயட்சே வேட்பாளர்!
மகாராஷ்டிரா சட்டசபையின் 288 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 65% வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பீட் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியில் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரைச் சேர்ந்தவர் பாலாசாகேப் ஷிண்டே. அவருக்கு 43 வயது.
அவர் பிற்பகல் 2 மணியளவில் சத்ரபதி ஷாஹு வித்யாலயா வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். அப்போது அவர் திடீரென தரையில் சரிந்தார். உடனடியாக அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கூடுதல் தகவல் என்னவென்றால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 52ன் கீழ், தேர்தல்களின் போது வேட்பாளர் இறந்தால், பிரிவு 52ன் கீழ், சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்களிப்பதை ஒத்திவைக்கலாம்.
தற்போது மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிலையில், அடுத்த ஆட்சியை யார் அமைப்பது என்பதில் அங்கு போட்டி நிலவுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!