தாய் பால் கொடுத்த போது சோகம்... ஒரு மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாதமே ஆன பெண் குழந்தை, கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் கொடுத்த சிறிது நேரத்தில் அசைவின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பால் கொடுத்தவுடன் தூங்க வைத்ததுதான் உயிரிழப்புக்குக் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் அனில் (21). இவரது மனைவி பூஜா (20). இவர்களுக்குப் பிறந்து ஒரு மாதமேயான ஸ்ரீனி என்ற பெண் குழந்தை இருந்தது. பூஜாவுக்கு இருந்த கடுமையான தலைவலி மற்றும் கால்வலி காரணமாக, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மாதம் 28-ஆம் தேதி அவர் கோவை அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் குழந்தை அழுததால், பூஜா குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாயும் குழந்தையும் தூங்கிய நிலையில், காலை 7 மணியளவில் எழுந்து பார்த்தபோது குழந்தை அசைவின்றி கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அனில் மற்றும் பூஜா, மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தனர். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் குழந்தையின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய்ப்பால் குடித்து விட்டு உடனே தூங்க வைத்ததால் குழந்தை உயிரிழந்ததா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இறப்புக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
