பட்ஜெட் 2025 : எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு ... முழு தகவல்கள்!

 
செல்போன்

 இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் அறிவிப்பின்படி விலையேறும் மற்றும் விலை குறையும் பொருட்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  37 க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மருந்துகளின் விலை குறைய உள்ளது. அதேபோல் புற்றுநோய், அரிய பிற நோய்களுக்கான 36 மருந்துகளுக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அதன் விலையும் குறைய உள்ளது.

பட்ஜெட்

 இதுதவிர கோபால்ட் புராடெக்ட்டுகள், எல்இடி, ஜிங்க், லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப், உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் அதன் விலையும் குறைய உள்ளது. மேலும் 12 அரிய மினரல்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது.  லெதர், ஜாக்கெட், ஷு, பெல்ட், பர்ஸ் இவைகளின்  பொருட்கள் குறைக்கப்பட உள்ளது.பதப்படுத்தப்பட்ட மீன் பேஸ்ட் (சுரிமி) மீதான ஏற்றுமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களுக்கான open cells and other components-க்களான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை என்பது குறைய வாய்ப்புள்ளது.

 செல்போன்

விலை உயரும் பொருட்கள்:

interactive flat panel மீதான அடிப்படை சுங்க வரி என்பது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.  தொலைக்காட்சி மற்றும் செல்போன்களின்   விலை உயர வாய்ப்புள்ளது. 
மத்திய அரசு, 2024ம் ஆண்டில், மக்காத பிளாஸ்டிக்குகளுக்கான சுங்க வரியை 25 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது. குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான அடிப்படை சுங்க வரியும் 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தது. இதனால் அதன் விலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web