குளத்தில் குளித்த போது விபரீதம்.. இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியான சோகம்!

 
நீரில் மூழ்குதல்

கடலூரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். கடலூர் நகரின் நத்தவெளியில் உள்ள குளத்தில் 5 சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும், அவர்களை மீட்க மற்றவர்கள் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அருகில் இருந்தவர்கள் 2 சிறுவர்களையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, உயிரிழந்த சிறுவர்கள் அரிசி பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சரவண பாலாஜி, ஸ்ரீஹரன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web