“எவன் வந்தா நமக்கென்ன? திமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!
எவன் வந்தா நமக்கு என்ன? திமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நேற்று சென்னை ஆர்கே நகரில் திமுக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஆர்.எஸ்.பாரதி பேசுகையில் தெரிவித்தார்.
விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தேம்ஸ் நதியை கட்டுபடுத்தவோ நிறுத்தவோ யாராலும் முடியாது. அந்த தேம்ஸ் நதி போல் திமுக நிற்காமல் ஓடும். யார் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. கலைஞரின் நூற்றாண்டு காலத்தில் அவரது நினைவுகளை ஏற்போமானால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. திமுகவினர் ஒரே குடும்பம் நம் குடும்பம் ஒன்றாக செயல்பட்டால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. திமுக சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் 100 பேச்சாளர்கள் சரியாக பயன்படுத்தினால் பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கும். எவன் வந்தாலும் போனாலும் நமக்கொன்றும் இல்லை.
நம்மை எதிர்ப்பவர்க்கு நாம் தானே போட்டி தவிர, நமக்கு போட்டி யாரும் இல்லை. நம்மை எதிர்த்து போட்டி போடுபவர்கள், அவர்களுக்குள்ளேயே போட்டி போட்டு இறுதியாக நம்மிடம் வரட்டும். அப்படி வருபவர்களை ஒரே தட்டு தட்டி வெற்றி பெற்றிடலாம். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் உருப்படமாட்டார் என கூறிய கலைஞர் தான் 5 முறை தமிழகத்தின் முதல்வரானார். மக்கள் ஒருவரை தூக்கிவைத்து ரொம்ப ஆடினார்கள், இறுதியில் அவரது அடக்கம் கூட நாம் தாம் செய்தோம். கட்சி என்ற குடும்பத்தை நாம் பக்குவபடுத்தி நடத்தி செல்ல வேண்டும், எதைப் பற்றியும் நாம் கவலைப்பட தேவையில்லை. வருவோர், போவோரை தூக்கி கொண்டாடுவார்கள். ஏற்கனவே ஒருவரை தூக்கி கொண்டாடியவரை அடக்கம் கூட நாம் தான் செய்தோம். நம்மை எதிர்ப்பவர்க்கு நாம் தானே போட்டி தவிர நமக்கு போட்டி யாரும் இல்லை” எனக் கூறினார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!