’யாருக்கு காசு வேண்டும்'.. அமைச்சர் கொடுத்த காசோலையை தூக்கி வீசிய சிறுமியின் உறவினர்கள்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அமைச்சர் பொன்முடி சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணமாக 3 லட்சம் காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வழங்கினார். ஆனால், சிறுமியின் தாய் அதை ஏற்க மறுத்து, ‘யாருக்கு காசு வேண்டும்.. கோடி ரூபாய் கொடுத்தாலும், எங்க குழந்தையை வாங்க முடியாது’ என்று கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து அந்த காசோலையை சிறுமியின் உறவினர்களிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். யாரையும் விடமாட்டோம் என சிறுமியின் உறவினர்களிடம் உறுதியளித்தார். சிறுமியின் தாயார் சிறுமியின் சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் காசோலையை வைத்து கதறி அழுதார். அப்போது, உறவினர் ஒருவர் காசோலையை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!