பெரியாரை யார் விமர்சித்தாலும் ஈனப்பிறவிகளே... துரை வைகோ ஆவேசம்!

 
வைகோ

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., “ஈரோடு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சந்திரகுமாரை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். இது தந்தை பெரியாரின் மண். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு சமூக நீதியில் வழிகாட்டுகின்ற கலங்கரை விளக்கமாக தந்தை பெரியார் திகழ்ந்தார்.

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேற, கல்வி வளர்ச்சி பெற, அடித்தளத்தை ஏற்படுத்தியவர்  தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான். தந்தை பெரியாரை கேவலப்படுத்திய ஈனப்பிறவிகளுக்கு தந்தை பெரியார் மண்ணில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். 

வைகோ

இந்தியா கூட்டணி மட்டுமல்ல அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பொது வேட்பாளராக கருதி சந்திரகுமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வேங்கைவயல் பிரச்சனையில் விசாரணைக்கு பிறகு தகுந்த ஆதாரங்களுடன் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் உயர்நீதி மன்றம் எடுக்கும் முடிவு இறுதியானது. அந்த கிராமத்தில் சாதிய ரீதியான வன்மம் எதுவும் கிடையாது. சமூக நீதிக்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட பெண்ணுரிமைக்காக பாடுபட்ட தந்தை பெரியாரை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிகள் தான். பரந்தூர் சென்று விவசாயிகளை சந்தித்த விஜய் விமான நிலையத்திற்கு மாற்று நிலத்தை கண்டறிந்து சொல்ல வேண்டும்.

ஆளுனர் ரவி தொடர்ந்து அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ரவி மட்டுமல்ல, பாஜக அல்லாத மாநில அரசுகள் உள்ள ஆளுநர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. மாநில அரசுகளுக்கு எதிராக நடந்து கொள்வதும் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதும் ஆளுநர்களின் செயலாக உள்ளது. தமிழ்நாட்டில் எட்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் கிடையாது. மாநில அரசுக்கு எந்த தலையீடும் இருக்கக் கூடாது என  நினைக்கிறார்.

வைகோ

பல்கலைக்கழகம் முழுக்க மாநில அரசின் நிதியில் இயங்குகிறது .நிர்வாக உரிமை மாநில அரசிடம் தான் இருக்க வேண்டும். இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.  நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் அனைத்து பல்கலைக்கழகத்தையும் கட்டுப்பாட்டை முழுமையாக கொண்டு வருவது ஆரோக்கியமான ஜனநாயக கிடையாது” என ஆவேசமாக பேசியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web