கரூர் துயர சம்பவத்தில் அழுதது ஏன்? – விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

 
கரூர் அன்பில்

கரூர் மாவட்டம் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு துயர சம்பவத்தில் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழுதது ட்ரோல் செய்யப்பட்டு, அவரது நடிப்பு என்று பரவலாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது.

கரூர்

இந்நிலையில் மதுரையில் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது குறித்து பேசுகையில், “கரூர் சம்பவத்தின் துயரத்தால் நான் அழுதேன். சமூக வலைதளங்களில் விமர்சகர்கள் இதை விவாதிக்கிறார்கள். ஆனால் உணர்ச்சிகளும் அறிவும் சமமான பேச்சுகள் அமைந்தாலேயே சமுதாயம் முன்னேறும். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி போனால் விலங்குகளுக்கு சமமான நிலை ஏற்படும். அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றினால் மரத்திற்கு சமமான நிலை என்று வள்ளுவர் கூறியுள்ளார்” என்றார்.

கரூர்

மேலும் பேசிய அமைச்சர், பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கி இருப்பதை அகற்ற தலைமை ஆசிரியர்கள் உத்தரவிட்டிருந்தனர். மழைக்காலங்களில் பயிற்சி-விடுமுறை வழங்கும் நிலை குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?