தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 
மீனவர்கள்

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 300 விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் இந்த மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு 3 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அந்த பகுதியில் விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களை அந்த பகுதியில் மீன் பிடிக்க விடாமல் விரட்டியதாக கூறப்படுகிறது. 

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலில் வீசிய வலைகளை அவசர அவசரமாக வெட்டி எடுத்து கொண்டு கரைக்கு திரும்பினர். 

மீனவர்கள் இலங்கை

தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், மீன் பிடிக்க விடாமல் விரட்டியடிப்பதுமாக இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web