'உனக்கெதுக்கு நான் சோறு போடணும்’ மனைவியிடம் எகிறிய கணவன்... ‘நல்லா சந்தோஷமா இரு...’ பதில் அனுப்பி உயிரை விட்ட மனைவி!

 
அரவிந்த்குமார்

உனக்கெதுக்கு நான் சம்பாதித்து சோறு போட வேண்டும் என்று காதல் மனைவியிடம் எகிறிய கணவனிடம், நல்லா இரு என்று வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு மனைவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கடலூரை அதிர செய்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புவனகிரி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (28), சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார் (28). இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த நிலையில், அறிமுகமாகி காதலித்து வந்தவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர்.

இந்நிலையில் அரவிந்த்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ஒரு கட்டத்தில் மனைவியைப் பார்த்து, ' உனக்கு நான் ஏன் சோறு போட வேண்டும்? 'நீ அனாதை' என்று கூறி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரவிந்த்குமார் கடந்த 21ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக விக்கிரவாண்டிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்த போது மனைவி ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கைது

மேலும் தற்கொலை செய்து கொண்ட ஐஸ்வர்யா, "என் இறப்புக்கு என் கணவர் மட்டுமே காரணம். அவர் எனது ஈமச் சடங்கில் கலந்துக் கொள்ளக் கூடாது. நீ நல்லா இரு" என்று வாட்ஸாப் ஆடியோ அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கணவர் அரவிந்த் குமாரை போலீசார் கைது செய்தனர். ஐஸ்வர்யாவின் கணவர் அரவிந்த் குமார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web