இன்ஸ்டா காதலனுக்காக மனைவி செய்த கொடூரம்.. கூலிப்படை மூலம் துள்ள துடிக்க கணவன் கொலை!

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள சிஞ்சுலி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த இளம்பெண் ஹர்ஷிதா (28) அறிமுகமானார். இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் குண்டா என்ற இளைஞருடன் ஹர்ஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளகாதலாக மாறியது. விஷயம் கணவருக்கு தெரியவந்தது. இந்நிலையில் ஹர்ஷிதா தனது கணவர் உயிருடன் இருக்கும் வரை சேர்ந்து வாழ முடியாது என அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, பிரகாஷை தனியாக அழைத்துச் சென்ற ஹர்ஷிதா, கூலிப்படை மூலம் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றார்.
இந்த சம்பவத்தில் சந்தேகமடைந்த போலீசார் அவரது மனைவி ஹர்ஷிதாவிடம் அதிரடியாக விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம் காதலனுக்காக கணவனை கொலை செய்ததை கூலிப்படை ஏவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஹர்ஷிதா, சோமேசேகர், ரங்கஸ்வாமய்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான குண்டாவை தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!