லாரி சக்கரத்தில் சிக்கி மனைவி துடிதுடித்து பலி... கணவன் கண்முன்னே பரிதாபம்!

 
லாரி விபத்து
 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவில் வசித்து வருபவர்  முருகேசன். கூலித் தொழில் செய்து வரும்  இவரது மனைவி 40 வயது முப்புடாதி.  இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். முருகேசனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தென்காசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பைக்விபத்து


அவரை பார்ப்பதற்காக முருகேசன் தனது மனைவி முப்புடாதியுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தாயை பார்த்து விட்டு 2 பேரும்  இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். செங்கோட்டை பழைய சினிமா தியேட்டர் அருகில் மெயின் ரோட்டில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறியது. இதில் கணவன் , மனைவி  2 பேரும் தவறி கீழே விழுந்தனர்.
அதே நேரத்தில்  பின்னால் வந்த  லாரியின் சக்கரம் கண்இமைக்கும் நேரத்தில் முப்புடாதி தலையில் ஏறிஇறங்கியது.

ஆம்புலன்ஸ்

இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணவன் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார்.  முருகேசன் அதிர்ச்சி அடைந்து அலறினாா். இந்த விபத்து குறித்து  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முப்புடாதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web