கொடூரம்... மட்டன் குழம்பில் 15 மாத்திரைகள் கலந்து கணவனை தூக்கில் தொங்க விட்ட மனைவி!
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சத்பகிரி பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய டிரைவர் சுரேஷ் மற்றும் 30 வயதுடைய மவுனிகா, 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2 குழந்தைகள் பெற்றுள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார், அப்போது அஜய் என்ற நபருடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இதனால் மவுனிகா கணவரின் தொந்தரவு மற்றும் தாக்குதலால் கோபமடைந்து, அவரை கொல்வதற்கு திட்டம் அமைத்தார்.

மவுனிகா தனது உறவினர்களுக்கும், பாலியல் தொழிலாளி ஸ்ரீஜாவுக்கும் இந்த திட்டத்தை பகிர்ந்தார். ஸ்ரீஜா, சந்தியா மற்றும் தேவதாஸ் ஆகியோரின் மூலம் மவுனிகாவிற்கு மருந்துகள் கையளிக்கப்பட்டு, முதலில் 15 வயாகரா மாத்திரைகள் மட்டன் குழம்பில் கலந்து சுரேஷுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால் சுரேஷ் சாப்பிடவில்லை. பின்னர் மவுனிகா பிபி மற்றும் தூக்க மாத்திரைகளை அதிகளவில் மதுவில் கலந்து கொடுத்து, சுரேஷை மயங்கி விழுந்த நிலையில் புடவையால் தூக்கி கொன்று, பின்னர் சடலத்தை இறக்கி வைத்தார்.

சுரேஷின் தாயாருக்கு போலி தகவல் கூறி நாடகமாடிய மவுனிகாவும், அஜய், ஸ்ரீஜா, சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் ஆகியோர் போலீசார் கைது செய்யப்பட்டனர். கரீம்நகர் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
