ஆட்டோவில் வந்ததால் மனைவி படுகொலை.. கணவர் வெறிச்செயல்!
சென்னை மாவட்டம், பள்ளிக்கரணை பாரதிதாசன் முதல் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில மாதங்களாக வேலைக்கு வரவில்லை. இருப்பினும் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக மகாலட்சுமி வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு வரும் மகாலட்சுமியிடம், ஏன் இவ்வளவு தாமதமாக வீட்டுக்கு வருகிறாய் என, கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி தகராறு செய்துள்ளார். வேலை முடிந்து இரவு நேரமாகிவிட்டதால், மகாலட்சுமி ஆட்டோவில் வருவது வழக்கம். சம்பவத்தன்று மகாலட்சுமி இரவு ஆட்டோவில் வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோவில் ஏன் வருகிறாய் என்று கேட்டு தகராறு செய்தார்.
ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, காய்கறி கத்தியால் மனைவி மகாலட்சுமியை கொடூரமாக வெட்டிக் கொன்றார். இந்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது, போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம், கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!