கணவரின் புதிய காரை தீ வைத்து எரித்த மனைவி ... பரபரப்பு!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறு ஒரு தீவிர சம்பவமாக மாறியுள்ளது. சிக்கோடி தாலுகாவில் வசித்து வரும் விவசாயி சிவகவுடா பட்டீல். இவரது புதிய காரை மனைவி சாவித்திரியும், மகன் பிரஜ்வலும் சேர்ந்து தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகவுடா மற்றும் சாவித்திரி தம்பதிக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்குள் சமீப காலமாக குடும்பத் தகராறு மற்றும் சொத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதில், மகன் பிரஜ்வல் தாய்க்கு ஆதரவாக இருந்ததாக தெரிகிறது. நேற்று தம்பதிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமாக மாறி, புதிய காரை எரிக்கும் அளவுக்கு சென்றது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுமையாக எரிந்து தீயில் கருகி நாசமானது. மேலும், சிவகவுடாவுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சிக்கோடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாய், மகனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
