கணவரின் கழுத்தை அறுத்த மனைவி... அமெரிக்காவில் பரபரப்பு!

 
கணவர்

வடக்கு கரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி சந்திரபிரபா சிங், தனது கணவர் அரவிந்த் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டை சுத்தம் செய்யாததைச் சொந்தமாகக் கருத்து கொண்டு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சந்திரபிரபா சிங் கத்தியுடன் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக கணவரின் கழுத்தில் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அரவிந்த் அவசர உதவி எண்னிற்கு தகவல் அளித்து மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அமெரிக்கா போலீஸ்

சம்பவத்துக்கு பின்னர் காவல்துறையினர் சந்திரபிரபா சிங்கை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது சட்டவிரோதமாகவும், உள்நோக்கத்துடனும் கொடூரமாக தாக்குதல் செய்ததாக குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் முதலில் பிணை வழங்க மறுத்தபின், பின்னர் 10,000 டாலர் பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, அவர் பணியாற்றி வந்த எண்ட்ஹேவன் தொடக்கப் பள்ளியில் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சந்திரபிரபா சிங் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட நிலையில் ஜாமீனில் உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!