அதிர்ச்சி... விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்த காட்டு யானை... அலறி அடித்து ஓட்டம் பிடித்த மாணவர்கள்!

 
யானை

 நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள்  அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. அந்த வகையில்  பந்தலூர்   நெலாக்கோட்டை, 9-வது மைல், கூவச்சோலை, விலங்கூர், பிதிர்காடு, சூசம்பாடி, முதிரக்கொல்லி, முக்கட்டி, சோலாடி  பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து  அவை வாழை, தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகின்றன.

காட்டு யானை

இந்நிலையில், நெலாக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நேற்று மாலை வழக்கம்போல் மாணவர்கள் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று புழுதி பறக்க மைதானத்துக்குள் திடீரென ஓடி வந்தது. இதனை எதிர்பாராத  மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

குட்டி யானை

கண் இமைக்கும் நேரத்தில் காட்டு யானை, மாணவர்களை துரத்தத் தொடங்கியது. இதனால் அச்சம் அடைந்த மாணவர்கள் கூச்சலிட்டவாறு அலறி அடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.  நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த சேதமும் இன்றி  உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் காட்டு யானை அங்கிருந்து சென்று விட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web