‘முதல்வன்’ பட ஸ்டைலில் ஒரு நாள் முதல்வராக அஜீத்பவார்... தேவேந்திர பாட்னாவிஸ் அறிவிப்பு!

 
அஜீத்பவார்

மகாராஷ்டிராவில் சமீபத்தில்  நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றது. இந்நிலையில் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும்  இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவின் முதல்வராக பாஜக கட்சியின் மாநில தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிராவின் நிரந்தரத் துணை முதல்வர் என்று அழைக்கப்படும் அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு நாள் முதல்வர் ஆவார் என தற்போது தேவேந்திர பாட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி  சட்டப்பேரவையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில்  மகாராஷ்டிரா முதல்வர் அஜித் பவார் ஒருநாள் முதல்வர் ஆவார் எனவும்  அவருடைய உழைப்பு நிச்சயம் அதை சாத்தியப்படுத்தும் எனவும் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜீத்பவார்  இதுவரை 6 முறை  துணை முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அஜீத்பவார்

தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் அவர் ஒரு நாள் முதல்வராக வந்து அதிரடி செயல்களை செய்து மக்கள் கவனம் ஈர்ப்பார். இதே போல்  நிஜத்திலும் மகராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவார் ஒரு நாள் முதல்வராக செயல்படுவார் என்று தேவேந்திர பாட்னாவிஸ் அறிவித்துள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web