உலக கோப்பையைத் தக்க வைக்குமா இந்தியா? U-19 மகளிர் கிரிக்கெட்டில் இன்று தென்னாப்ரிக்காவுடன் இறுதிப்போட்டி!

இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா மோத இருக்கிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையைத் தக்க வைக்குமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கமாலினி அரை சதம் அடித்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர்.
மலேசியாவின் கோலாலம்பூர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியை 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்திய அணி. சுழற்பந்து வீச்சு வீராங்கனைகளான பருனிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஆயுஷி சுக்லா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டாவினா பெரின் 45, கேப்டன் அபி நார்குரோவ் 30, அம்மு சுரேன்குமார் 14 ரன்கள் சேர்த்தனர்.
114 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த கமாலினி 50 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். கோங்கடி திரிஷா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சானிகா சால்கே 11 ரன்கள் சேர்த்தார்.
இன்று பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!