தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் 17ம் தேதி தேர்வு?! லிஸ்ட்ல இவங்க பேர் எல்லாம் இருக்கு!
தமிழக பாஜகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள லிஸ்ட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். லிஸ்ட்டில் ட்விட்ஸ்ட் வைக்குப்படியான பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் அண்ணாமலையின் தலைமையில் தான் பாஜகவின் பெயர் தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது என்று மேலிடம் கருதுவதாகவும், அதற்கேற்ப புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க திமுவும், திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கி மீண்டும் அரியணையில் ஏற அதிமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயும் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பாஜகவும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்காக பாஜக கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய திட்டம் தீட்டி வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக-வின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்ய வரும் 17ம் தேதி பாஜக மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார். பாஜக மாநில தலைவர் பெயர்ப் பட்டியலில் தற்போதைய தலைவர் அண்ணாமலை, வானதி மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழிசை ஆர்வம் காட்டாவிட்டாலும் அவரது பெயரும் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. குஷ்புவுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள்.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!