நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற விழைகிறேன்... முதல்வர் ட்வீட்!

 
ரஜினிகாந்த்

 தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும்  நிலையில் விரைவில் இந்தப்படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்  திடீரென உடல் நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

 நடிகர்   ரஜினிகாந்த்


சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று  காலை மூத்த மருத்துவர்களின் குழு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர். நலமுடன் இருப்பதாகவும், கேத் லேப் மூலம் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டங்கள் சீராக உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை!! ரஜினிகாந்த் உருக்கம்!!


இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில்  “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web