குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு.. அரசு மருத்துவமனையின் அலட்சியமா? போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!

 
ஜெயப்பிரியா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பாண்டி, ஜெயப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜெயப்ரியா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 21ம் தேதி பிரசவத்திற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது, ஜெயப்பிரியாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதனால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கர்ப்பிணி

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கருப்பையை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, அவரது கருப்பையும் அகற்றப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயப்பிரியா, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துள்ளார். ஆனால் நேற்று ஜெயப்பிரியாவின் சிறுநீரகம் மற்றும் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவரின் அலட்சியத்தால் ஜெயப்பிரியா உயிரிழந்ததாகக் கூறி குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ​​புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.பின்னர், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். குடும்பக்கட்டுப்பாட்டுக்குப் பிறகு அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் இங்கு அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து உரிய சிகிச்சை அளித்தும் அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். உறவினர்களிடம் அனுமதி பெற்ற பிறகே பெண்ணின் கருப்பை அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web