பள்ளி - கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் இன்ஜினீயர் கைது... விசாரணையில் அதிர்ச்சி!

 
இளம்பெண் காதல் தோல்வி தனிமை

பெங்களூருவில் உள்ள பல தனியார் பள்ளி–கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலின் பின்னணியில் காதல் பழிவாங்கும் நோக்கம் இருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சம் பார்த்துள்ளது. சென்னை சேர்ந்த 30 வயது பெண் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ரெனே ஜோஷில்டாவை, பெங்களூரு வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 14ம் தேதியன்று போலீசார் கலாசிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாதுகாப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில், ரெனே ஜோஷில்டா பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்திருந்ததுடன், தன்னுடன் பரிச்சயமாக இருந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த இளைஞர் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் கோபமடைந்த ரெனே, பழிவாங்கும் நோக்கில் அவரை போலீசில் சிக்க வைக்க திட்டமிட்டார். இதற்காக அந்த இளைஞரின் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மடல்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும், குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், மைசூரு மற்றும் சென்னை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இதே மாதிரியான மிரட்டல் அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து முன்பு குஜராத் போலீசார் ரெனேவை கைது செய்து அகமதாபாத் சிறையில் அடைத்திருந்தனர்.

வெடிகுண்டு

பெங்களூரு சைபர் பிரிவு, ரெனேவை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரித்து வருகிறது. ரெனே, வி.பி.என் மற்றும் கேட்கோட் ஆப் மூலம் மெய்நிகர் எண்கள் பெற்று பல வாட்ஸ்அப் கணக்குகளை இயக்கியதும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இந்த கைது மூலம், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான ஆறு வழக்குகளுக்கு விடை கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காதலனை சிக்க வைக்க முயன்ற ரெனே தானே போலீசில் சிக்கியிருப்பது இந்த வழக்கில் திருப்பமாக அமைந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க