வீட்டில் தனிமையில் இருந்த பெண் நகைக்காக கொலை.. 12 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடியாக கைது!

 
சந்தோஷ்

நகைக்காக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் குற்றவாளி 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரபாவதி (40). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நகைக்காக நேற்று முன்தினம்(18ம் தேதி) இரவு மர்ம நபர் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார். இதையடுத்து திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க முயன்றனர்.

இந்நிலையில் கொலை நடந்த 12 மணி நேரத்தில் இளவங்கார்குடி கீழத்தெரு பகுதியை சேர்ந்த கேபிள் தொழிலாளி சந்தோஷ் (20) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று காலை பிரபாவதி வீட்டில் கேபிள் ஒர்க் செய்து கொண்டிருந்த சந்தோஷ், இரவு 9 மணியளவில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பிரபாவதி வீட்டுக்கு வந்தது தெரியவந்தது.

அங்கு கதவை பூட்டாமல், சமையலறையில் பிரபாவதி வேலை செய்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சந்தோஷ் உள்ளே நுழைந்தான். அவரை பார்த்ததும் வெளியே சென்ற பிரபாவதி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சந்தோஷ் போர்வையை எடுத்து பிரபாவதியின் முகத்தை மூடி தாக்கியுள்ளார். இதையடுத்து பிரபாவதி அங்கிருந்து கத்தியை எடுத்து சந்தோஷை தாக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அந்த கத்தியை பிடுங்கி பிரபாவதியை சரமாரியாக குத்தியதில் பிரபாவதியின் கழுத்து அறுபட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து சந்தோஷ் தலையணையை எடுத்து ரத்தம் கொட்டிய இடத்தில் அழுத்தியதில் பிரபாவதி உயிரிழந்தார். நான்கு பவுன் தாலிச் செயின் மற்றும் இதர நகைகள், லாக்கெட்டை திருடி, செல்போனையும் பறித்துச் சென்றார்.

கைது

இதையடுத்து தனது மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய சென்ற சந்தோஷ், பிரபாவதியின் மொபைலில் சிம்மை மாற்றியுள்ளார். பிரபாவதியின் மொபைலின் இஎம்ஐ எண் மூலம் சந்தோஷின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு கொலை நடந்த 12 மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான தனிப்படையினரை திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web