ஆண்நண்பர் மீது ஒயின் ஊற்றி தீவைத்து எரித்த பெண் !

 
போலீஸ்

தில்லியில் ஆண்நண்பரை கொலை செய்து, தீவைத்து எரித்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் கேஷ் மீனா (32) அரசு வேலைக்கான தேர்வுக்கு தயாராகி வந்தார். அவருடன் பழக்கம் ஏற்பட்ட அம்ரிதா சௌஹான் (21) என்பவர் அவருடன் லிவ்-இன் உறவில் தங்கி வந்தார்.அக்டோபர் 6 அன்று, ராம் கேஷ் வசித்த வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினர் உடனே சென்று செயல்பட்டபோதும், அவர் கருகிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

delhi crime, upsc aspirant killed, murder, delhi murder, delhi crime, delhi crime news, forensic sciences student, live in partner

சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த காவல்துறையினர், தீவிபத்துக்கு முன் மூவர் வீட்டுக்குள் சென்றது கண்டறிந்தனர். அவர்களில் ஒருவராக அம்ரிதா அடையாளம் காணப்பட்டார்.அவரை கைது செய்து விசாரித்தபோது, ராம் கேஷ் தனது தனிப்பட்ட விடியோக்களை நீக்க மறுத்ததால் கோபமடைந்த அம்ரிதா, தனது நண்பர்கள் சுமித் மற்றும் சந்தீப்புடன் சேர்ந்து அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

டெல்லி போலீஸ்

தடயவியல் அறிவியல் மாணவரான அம்ரிதா மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் வேலை பார்த்த சுமித், கொலைவை தீவிபத்தாக காட்டும் வகையில் திட்டமிட்டனர். ராம் கேஷை அடித்து கொன்று, அவரது உடலில் மண்ணெண்ணெய், நெய், ஒயின் ஊற்றி தீ வைத்தனர். பின்னர், சிலிண்டரை வெடிக்கும்படி அமைத்து அங்கிருந்து தப்பினர்.

காவல்துறை விசாரணையில், மூவரும் ராம் கேஷின் மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. தற்போது அம்ரிதா, சுமித், சந்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!