கனவு நனவான தருணம்... மாதம் 1,50000/- சம்பளத்தில் வேலையை உதறிவிட்டு பேக்கரி கடையை தொடங்கிய பெண்!

அவரவருக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்பது தான் அனைவரது கனவும். ஆனால் சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக கிடைக்கும் வேலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் பெங்களூரில் வசிக்கும் அஸ்மிதா பால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாத சம்பளம் ஒன்றரை லட்சம் இருப்பினும் அவருக்கு கேக், கிரீம் ஆகியவை அடங்கிய பேக்கரி கடையை தொடங்க வேண்டும் என ஆர்வம் இருந்துள்ளது. இதனால் இது குறித்து தனது கணவர் சாகரிடம் கேட்டுள்ளார்.
My wife left a 1.5 L pm job
— Sagar👨💻 🚀 (@code_sagar) January 25, 2025
to make these
thank god she did! pic.twitter.com/Bwv6qGjbmY
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்ததை ராஜினாமா செய்து விட்டு தனக்கு பிடித்த பேக்கரி தொழிலை செய்ய தொடங்கினார். இந்நிலையில் அஸ்மிதா செய்த ஒரு தயாரிப்பின் புகைப்படத்தை அவரது கணவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் மாதம் ஒன்றை லட்சம் சம்பளம் பெறும் பணியிலிருந்து விலக முடிவு செய்தார். அதிலிருந்து விலகிய என்னுடைய மனைவி இதனை செய்து முடித்துள்ளார். கடவுளுக்கு நன்றி என்று கூறி இருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!