பெண் ரயில்வே கேட் கீப்பரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு!

 
சாலோமன்

ரயில்வே பெண் ஊழியரின் நகையை பறித்த நபருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி சரண்யா (35). இவர் கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவை கடக்கும் இருப்புப் பாதை கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி சரண்யாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இது தொடர்பாக கும்பகோணம் ரிசர்வ் ரோடு காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், நகை திருட்டில் ஈடுபட்டவர் கும்பகோணம் வட்டம் கொரநாட்டுக் கருப்பூர் நத்தையை சேர்ந்த சாலோமன் (42) என்பது தெரியவந்தது.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

பின்னர், கடலூரில் சாலமனை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டனர். பின்னர் சாலமன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ​​ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். .

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web