அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்.. கணவர் கைது.. போலீசார் தீவிர விசாரணை!
தேனி அருகே 55 வயது பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, கணவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனஜா (55), சுருளி (60). உப்புக்கோட்டை வடக்கு கழனி தெருவில் வசித்து வருகின்றனர். சுருளி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வனஜா வீட்டில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த தேனி வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வனஜா கொலையில் வனஜாவின் கணவர் சுருளி விசாரணைக்காக வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வனஜா-சுருளி தம்பதிக்கு சுமதி, மல்லிகா என இரு மகள்களும், கணேசன் என்ற மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், அவர்களது திருமணமாகாத மகன் கணேசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!