திருவண்ணாமலை தீப மலையில் 2 நாட்களாக சிக்கி தவித்த பெண்.. முதுகில் சுமந்து மீட்ட வனக் காவலர்!

 
அன்னபூர்ணா

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூதக் கோயில்களில்  அக்னி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 13ம் தேதி மாலை கோயில் பின்புறமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை

கடந்த 14ம் தேதி மாலை முதல் நேற்று முன்தினம் மாலை வரை பௌர்ணமி என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 13ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மகாதீபம் மற்றும் பௌர்ணமியையொட்டி, அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மகாதீபத்தின் போது மலை ஏற பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆந்திராவை சேர்ந்த அன்னபூர்ணா (55) என்ற பெண் மலை ஏறியுள்ளார்.

அதன் பிறகு எப்படி திரும்புவது என்று தெரியாமல் 2 நாட்களாக தீபமலையில் தவித்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் இருப்பிடத்தை கண்டறிந்த வனக்காவலர்கள் அங்கு சென்று பத்திரமாக மீட்டனர். பின்னர், மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் சோர்வடைந்த அந்தப் பெண்ணை வனக் காவலர் முதுகில் சுமந்து மலையில் இருந்து கீழே இறக்கினார். வனக்காவலரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web