கால்வாயில் வீசப்பட்ட பெண்ணின் உடல்.. நிர்வாண நிலையில் போலீசார் மீட்பு!

 
சர்ஜாபுரம்

கர்நாடக மாநில எல்லையான ஓசூரை அடுத்த சர்ஜாபுரம் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் கடந்த மூன்று நாட்களாக துர்நாற்றம் வீசியதால், கால்வாயில் எலி இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதினர். இது குறித்து நகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாக்கடையை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ​​35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக சாக்கடையில் கிடந்தார். பின்னர் சர்ஜாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் பெண்ணை வேறு பகுதியில் கொன்று உடலை கால்வாயில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web