மக்காச்சோள வயலில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்.. விசாரணையில் அதிர்ச்சி.. காமக்கொடூரன் அதிரடியாக கைது!

 
குமரேசன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் வடக்கு காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கும், பாண்டியன்குப்பம் கிராமத்தை சேர்ந்த நிர்மலா என்பவருக்கும், எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவருக்கு, கனிஷ்கா என்ற 6 வயது மகளும், ஹரிணி என்ற 4 வயதில் மகளும் உள்ளனர். இவரது கணவர் செந்தில் நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநராக பணிபுரிந்து ஆந்திராவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்தார். இந்நிலையில், நிர்மலா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று மாலை நாகுக்குப்பம் தெற்கு மேடு பகுதியில் உள்ள பால் சேகரிப்பு நிலையத்தில் பால் வழங்கிவிட்டு   நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் நிர்மலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு பல இடங்களில் நிர்மலாவை தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அவரது தம்பி மணிவண்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ​​வீட்டின் அருகே உள்ள சோள வயலில் பால் கேன்கள் மற்றும் காய்கறி துப்பட்டா சிதறி கிடந்தது. சற்று தொலைவில் சகோதரி நிர்மலா இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் குமரேசன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கைது

சின்னசேலம் நைனார்பாளையம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்த குமரேசன், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது பால் கொடுக்க வந்த நிர்மலாவை தாக்கி மக்காச்சோள வயலுக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த நிர்மலா தனக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்வார் பயந்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து ஏழு நாட்களுக்கும் மேலாக இந்தக் கொலையின் குற்றவாளி யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், தற்போது ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web