பெண்கள் பர்தா அணிய தடை.. மீறினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம்.. சுவிட்சர்லாந்து அரசு உத்தரவு!
முஸ்லீம் பெண்கள் முகத்தையும் உடலையும் மறைக்கும் வகையில் அணியும் பர்தாவுக்கு சுவிட்சர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதைத் தடை செய்ய சுவிட்சர்லாந்தில் மார்ச் 2021 இல் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்ததால், தற்போது சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
நேற்று அமலுக்கு வந்த சட்டத்தின்படி, விமானங்கள் மற்றும் தூதரக வளாகங்களில் தடை அமல்படுத்தப்படாது. வழிபாட்டுத் தலங்கள், பிற புனிதத் தலங்கள் மற்றும் மசூதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் முகத்தை மறைக்க முடியும்.
மத அல்லது காலநிலை காரணங்களுக்காக அவ்வாறு செய்ய அனுமதி இல்லை. தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கொடுக்க மறுத்தால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!