’வாங்குன பணத்த திருப்பி கொடுக்க மாட்டியா?’.. ரயில்வே ஊழியர் கொடூர கொலை.. 3 பேர் அதிரடியாக கைது!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர், மத்தியமான்பாடி கூச்சல் அருகே, கடந்த மாதம் 29ம் தேதி, தலை மற்றும் கழுத்தில் ரத்தக் காயங்களுடன், சாலையோரத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் கொலை என்பது தெரியவந்தது.
அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தம் ஆகியோர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் சந்தேகத்தின் பேரில் கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது, செங்கல்பட்டு மாவட்டம், பெரிய மேலமையூர் அடுத்த மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பாபி என்ற பாபு மகன் ரமேஷ், 47. ரயில்வே துறையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
ரமேஷ் செங்கல்பட்டு நத்தம், அரிகர் அண்ணா தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி தமிழ்செல்வியிடம் சுமார் 13 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி தராமல் ரமேஷ் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இது கார்த்திக்கு தெரிய வந்தது, இதனால் கார்த்திக், அவரது கூட்டாளி ஸ்ரீநாத் மற்றும் சிவா (35), கார்த்திக்கின் மனைவி தமிழ்ச்செல்வி (27) ஆகியோர் ரமேஷைக் கடத்திச் சென்று தாக்கினர். அப்போது ரமேஷ் தனது மனைவி உத்தரமேரூரில் இருப்பதாகவு, பணவசதியாக இருப்பதாகவும் தன்னை விட்டுவிடுங்கள் என்று கூறி கெஞ்சியுள்ளார். உடனே அவர்கள் ரமேஷை அழைத்துக்கொண்டு உத்தரமேரூர் வந்தனர்.
உத்தரமேரூர் சென்றடைந்ததும், எனது மனைவி காஞ்சிபுரத்தில் இருப்பதாக ரமேஷ் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த நால்வரும் ரமேஷை தாக்கியதில், ரமேஷ் சுயநலமின்றி நிலைகுலைந்து விழுந்தார். உடனடியாக தலையில் அடித்து, கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடலை வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீநாத் தலைமறைவாக உள்ள நிலையில், கார்த்திக், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, சிவா ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடனை திருப்பி செலுத்தாத ரயில்வே ஊழியரை அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரமேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!