‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது... தமிழிசை காட்டம்!

"வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நடிகர் விஜய்யால் எதுவும் செய்ய முடியாது" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் புதுவை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகுதா? Invisible-ஆ இருந்து ஒரு வருஷம் ஆகிவிட்டதா? Visible-ஆ வந்து எவ்வளவு வருஷம் என்று தெரியவில்லை. அவர் திரையில் Visible-ஆக இருக்கிறார், அவரது ரசிகர்கள் கோபித்து கொள்ளக் கூடாது. அவர் களத்திற்கு வந்து மக்கள் பணியாற்றினால் மகிழ்ச்சி.
"ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாணி உண்டு. அதுபோல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும். வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் போன்ற தலைவர்கள், மக்களோடு மக்களாக பழகும் தலைவர்களே சரியான தலைவர்கள் என நினைக்கிறோம். அதனை விஜய் முடிவு செய்யட்டும். மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் சகோதர, சகோதரிகளுக்கு வரியே இல்லை என்பது வரி வரியாக கொண்டாடக்கூடிய பட்ஜெட்” என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!