"Work-life balance”.. யார் மீதும் கருத்தை திணிக்காதீர்.. இன்போசிஸ் நிறுவனருக்கு பதிலடி கொடுத்த அதானி!

 
அதானி

இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி முன்பு கூறிய கருத்து குறித்து இணையத்தில் இன்றும் பெரும் விவாதம் நடந்து வருகிறது. வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்தால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இந்தியா முன்னேற 70 மணி நேர வேலை அவசியம் என்ற விவாதம் மறுபுறம் சூடுபிடித்துள்ளது.


இந்நிலையில் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி, "ஒவ்வொருவருக்கும் வேலை-வாழ்க்கை சமநிலை வேறுபடும். சிலருக்கு வீட்டில் 4 மணி நேரம் செலவழித்தால் போதும். சிலருக்கு 8 மணி நேரம் செலவிட வேண்டும். இருப்பினும் நீங்கள் விரும்பியதைச் செய்யும்போது, ​​​​உங்கள் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையில் இருக்கும. வேலை-வாழ்க்கை சமநிலை குறித்து உங்கள் கருத்தை என் மீது அல்லது எனது கருத்தை உங்கள் மீது திணிக்க கூடாது, எங்களுக்கு வேலை அல்லது வீட்டைத் தவிர வேறு உலகம் இல்லை’ என்று பதிவிட்டிருந்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web