மருத்துவமனை தீயில் சிக்கிய 7 குழந்தைகளை மீட்ட தொழிலாளி.. இரட்டை பெண் குழந்தைகளை பறிகொடுத்த சோகம்!

 
யாகூப் மன்சூரி,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமி பாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் வார்டில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்தனர், 43 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

தீவிபத்து

தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், உத்தரபிரதேச முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிபத்தில் மருத்துவமனையின் வெளியே படுத்திருந்த தினக்கூலி தொழிலாளியான யாகூப் மன்சூரி, மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து புகைக்கு மத்தியில் உள்ளே சென்று 7 பச்சிளம் குழந்தைகளை மீட்டார்.

உத்திரப்பிரதேசம்

இருப்பினும், அதே மருத்துவமனையில் பிறந்த அவரது இரட்டை பெண் குழந்தைகள் மறுநாள் இறந்து கிடந்தனர். தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என யாகூப் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web