பணிச்சுமையால் நாற்காலியில் அமர்ந்தபடியே உயிரிழந்த இளம்பெண்!
பணிச்சுமை காரணமாக பணியில் இருந்த வங்கி ஊழியர் ஒருவர் திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஐடி நிறுவனங்கள், தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், இதனால் சிலர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியில் கூடுதல் துணைத் தலைவராக லக்னோவைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பணிச்சுமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!