சீறிப் பாய்ந்த காளைகள்... உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது!

முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப் பட்டு கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்ற பெறும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது, முதல் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசளிக்கப்படுகிறது.2வது பரிசு பெறும் காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசுவும், மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் வளக்கப்படுகிறது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்கக்காசு, அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்காக 7 மருத்துவ குழுவும், வீரர்களுக்காக 25 மருத்துவர்கள் என 120 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல். பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை காவல் ஆணையர் தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!