உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்!

 
ஜான் டின்னிஸ்வுட்

  
டைட்டானிக் கப்பல் மூழ்கிய 1912ம் ஆண்டில்  பிறந்த உலகின் மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜான் டின்னிஸ்வுட் தற்போது காலமானார். தற்போது அவருக்கு வயது 112.  கடந்த சில நாட்களாக  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் நகரில்  ஆகஸ்ட் 26, 1912ம் ஆண்டு ஜான் டின்னிஸ்வுட் பிறந்தார்.

ஜான் டின்னிஸ்வுட்

இவர், தனது மகள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.  இந்தாண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற சான்றிதழைப் பெற்றார்.மறைந்த ஜான் டின்னிஸ்வுட் இத்தனை காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு “ ஆரோக்கியமாக இருக்க எல்லாவற்றிலும் மிதமானதாக இருக்க வேண்டும். நீங்கள் அதிகமாக குடித்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால் அல்லது அதிகமாக நடந்தால், நீங்கள் எதையும் அதிகமாக செய்தால் இறுதியில் பாதிக்கப்படுவீர்கள்” என டிப்ஸ் கொடுத்தார்.

ஜான் டின்னிஸ்வுட்

இதுவே ஆயுளின் ரகசியம் எனக் கூறினர். 114 வயதான வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸின் மரணத்தைத் தொடர்ந்து, ஜான் டின்னிஸ்வுட் ஏப்ரல் மாதம் உலகின் வயதான மனிதர் ஆனார். தற்போது உலகில் வாழும் மிகவும் வயதான பெண்மணி ஜப்பானைச் சேர்ந்த டோமிகோ இடூகா மட்டுமே இவருக்கு வயது 116 என்பது குறிப்பிடத்தக்கது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web