சீனாவுக்கு பெரிய ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு!
கொரோனா காலத்துக்கு அப்புறமா உலகின் மொத்த நாடுகளும் பொருளாதாரத்தில் சரிவைக் கண்டு கதறிக் கொண்டிருக்க, இதன் துவக்கப் புள்ளியாக இருந்த சீனாவுக்கு தற்போது மிகப் பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது. சீனாவில் ஹூனான் மாகாணத்தில் இருக்கும் பிங்ஜியாங் மாவட்டத்தில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கச் சுரங்கத்தில் 1,000 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தங்கம் சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சீனாவை பாதிக்காமல் இருக்க உதவுகிறது.
இந்த தங்கச் சுரங்கத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் தங்க நரம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. தங்க நரம்புகள் என்பது பாறைகளுக்கு இடையே வரி வரியாக இருக்கும் தங்கம் தான். இந்த நரம்புகளில் மட்டும் சுமார் 300 மெட்ரிக் டன் தங்கம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் துளையிடப்பட்ட பாறைகளுக்கு நடுவிலும் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தோராயமாக 1000 மெட்ரிக் டன் தங்கம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக சீனா 2,000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை இருப்பு வைத்துக் கொண்டு உலக தங்கச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
உலகின் மொத்த தங்க உற்பத்தியில் தற்போது 10 சதவீத பங்களிப்பை சீனா வழங்கி வரும் நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கம், சீனாவின் தங்கத் தொழிலை மேலும் வலுப்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!