அரசு பள்ளி உணவில் கிடந்த புழுக்கள்.. உடல் உபாதையால் 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

 
ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் உள்ள மாகனூர் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு வயிற்று வலி மற்றும் வாந்தி என புகார் அளித்துள்ளனர். அவர்களை பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உடலுக்கு பலம் தரும் ஓட்ஸ் உப்புமா!

வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக சில மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதுபற்றி மாணவர் கூறுகையில், ''உப்புமா  கொடுத்தார்கள், சாப்பிட்டோம். பின்னர், உணவில் புழுக்கள் இருப்பதாக பள்ளி ஊழியர்களிடம் தெரிவித்தோம், அவர்கள் (அதிகாரிகள்) அதை தூக்கி எறிந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 மாணவர்களைத் தவிர, மற்ற அனைவரும் நலமுடன் இருப்பதாக மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தெலங்கானா  முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளை ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். பணிகளில் அலட்சியம் காட்டுபவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க நாராயண்பேட் மாவட்ட ஆட்சியருக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என எச்சரித்த அவர், இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web