செல்வம் சேர விநாயகர் சதுர்த்தி பூஜையை இப்படி செய்து வழிபடுங்க!

 
விநாயகர்

விநாயகர் சதுர்த்தியன்று இந்த பூஜையைத் துவங்கலாம். அதன் பின்னர் வரும் மாத சதுர்த்தி தினங்களில் தொடர்ந்து விநாயகரை வழிபட்டு வரலாம். நிரந்தரமாக உங்கள் இல்லத்தில் செல்வம் தங்கும். முழு முதற் கடவுளான விநாயகரைத் தொடர்ந்து வழிபட்டு வர, விக்னங்கள் தீரும் என்பது உண்மை. விநாயகர் சதுர்த்தி நாளில் அருகம்புல் வழிபாடு செய்ய நம் இன்னல்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

தூர்வா என்றால் அருகம்புல். யுக்மம் என்றால் இரட்டை என்று பொருள். விநாயகர் சதுர்த்தி தினத்தில் அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க அற்புத பலன்களைப் பெறலாம். அதிலும் இரண்டு இரண்டாக அருகம்புற்களை எடுத்து கணநாதனின் நாமத்தைச் சொல்லி சாத்தி வழிபாடு செய்திட நினைத்தது நிறைவேறும்.குபேரனை விட மேலான செல்வத்தை பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.

குபேரனை விட மேலான செல்வம் சேர விநாயகர் சதுர்த்தி பூஜை இப்படி செய்து பாருங்க!

அருகம்புல் மழை இல்லாவிட்டாலும் எல்லா இடங்களிலும் இருக்குமே தவிர அழிந்து போகாது என்பது விஞ்ஞான உண்மை. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விட்டு விடும். எத்தனை துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி சென்றனர்.

தன்னுடைய செல்வங்களை காட்டிலும் மேலானது அருகம்புல் என்கிறார் குபேரர். பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தம் அருகம்புல்லின் மீது விழுந்ததால் அதற்கு அழிவே கிடையாது என்கின்றன புராணங்கள். அருகம்புல்லுக்கு நல்ல சக்தியை தேக்கி வைத்து தீய சக்தியை விலக்கி வைக்கும் தன்மை கொண்டது.

குபேரனை விட மேலான செல்வம் சேர விநாயகர் சதுர்த்தி பூஜை இப்படி செய்து பாருங்க!

யாஷினி தேவி என்ற தேவ மங்கை ஒருத்தி விநாயகரை திருமணம் செய்ய நினைத்து தவம் இருந்தாள். ஆனால் விநாயகர் அருகம்புல்லாக மாறி எப்போதும் தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என வரமளித்தார் என்கிறது ஒரு புராண கதை.

பார்வதியும் சிவனும் தாயம் விளையாடிய போது நடுவராக இருந்த நந்தி சிவனுக்கு ஆதரவாக கூறியதால் கோபம் கொண்ட பார்வதி , நந்திக்கு சாபம் கொடுத்தாள். பின்னர் விநாயக சதுர்த்தியின் போது விநாயகருக்கு விருப்பமான பொருளை சமர்பிக்க விமோசனமும் அளித்தாள். அதன்படி அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றதாகவும் தனிக்கதை உண்டு.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web